September 22, 2022 தண்டோரா குழு
கோவையில் பன்றி காய்ச்சல் பாதிப்புக்கு 5 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பருவகால காய்ச்சல் பாதிப்புகள் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வருகிறது. கோவையிலும் கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி வருகிறது.குறிப்பாக குழந்தைகளிடையே காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.எனவே குழந்தைகளிடையே லேசான காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் காணப்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுகொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.