December 25, 2024
தண்டோரா குழு
கோவையில் உள்ள நடுத்தர மக்களும் சொகுசு கார்களில் பயணம் மேற்கொள்ளவே,500க்கும் மேற்பட்ட கார்களின் அணிவகுப்புடன் நடைபெறும் மாபெரும் யூஸ்டு கார் மேளா நடைபெறுகிறது என்று ஸ்ரீ சாமி கார்ஸ் தலைவர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் பல வருடங்களாக யூஸ்டு கார் ஷோரூம் வெற்றிகரமாக நடத்தி வரும் நிறுவனம் ஸ்ரீ சாமி கார்ஸ்.இந்நிறுவனத்தில் குறைந்த விலை கொண்ட கார்கள் முதல் நவீன சொகுசுகள் கார்கள் வரை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஸ்ரீசாமி கார்ஸ் சார்பில் கோவை மேட்டுப்பாளையம் சாலை வெள்ளகிணறு பிரிவு அருகே உள்ள ஸ்ரீலட்சுமி நாராயண மஹாலில் மாபெரும் யூஸ்டு கார் மேளா நடைபெற்றது. இதில் பலதரப்பட்ட யூஸ்டு கார்களை விற்பனை செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இன்று மாபெரும் யூஸ்டு கார் மேளா துவங்கி உள்ளது. இன்று 25ந் தேதி துவங்கும் இந்த மேளா 30ந் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது. மேளாவில் சிறிய வகை பட்ஜெட் ரூ.2 லட்சம் கொண்ட கார்கள் முதல் ரூ.60 லட்சம் விலை கொண்ட சொகுசு கார்கள் வரை என 500க்கும் மேற்பட்ட கார்கள் காட்சிப்படுத்தபட உள்ளது.
வாடிக்கையாளர்கள் நேரில் வந்து, தங்களுக்கு ஏதுவான கார்களை ஓட்டிபார்த்தும்,சோதனை செய்தும் வாங்கி கொள்ளும் வகையில் மேளா அமைந்துள்ளது.மேலும் வாடிக்கையாளர்கள் குறைந்த முன்பணம் அளித்து,பிரபல வங்கிகளில் கடனுதவி பெற,மேளாவில் 15க்கும் வங்கி சேவைகள் அளிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேளா குறித்து ஸ்ரீசாமி கார்ஸ் தலைவர் சந்தோஷ்குமார் கூறும்போது,
நடுத்தர சாதாரண மக்களும் சொகுசு கார்களில் தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற உரிய நோக்கில், ஒவ்வொரு வருடமும், யூஸ்டு கார் மேளா நடத்துகிறோம்.
இந்த மேளாவில் பிரமாண்டமான முறையில் 500க்கும் மேற்பட்ட கார்களை பொது மக்கள் நேரில் பார்த்து வாங்கி செல்லாம். அனைத்து கார்களும் ஷோரூம் தரத்தில் காட்சிப்படுத்தியுள்ளோம். இந்த கார் மேளா தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.இந்த மெகா விற்பனை திருவிழாவில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து அனைத்து வகையான பயன்படுத்தப்பட்ட கார்கள் அணிவகுத்து உள்ளது. இதில் இடம்பெறும் கார்கள் மற்றும் அவற்றின் ஆவணங்கள் முழுவதும், சரிபார்க்கபட்டு பரிசோதனை செய்யப்பட்டவை.
வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை ஒருமணி நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு விற்பனை கவுண்டர்களும், பேங்க் லோன் வசதியும் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.மிக குறைந்த முன்பணத்தில், மிக குறைந்த வட்டியில் 90% வரை உடனடி கடன் வசதி பெற்று குறிபிட்ட வாகனங்களை எடுத்து செல்லாம். வாங்குவோரும், விற்பவரும் மன நிறைவு பெறும் வகையில், இந்த மேளா அமையும், அதுமட்டுமின்றி பொதுமக்கள் ஆன்லைன் விற்பனை வர்த்தகக்தில் ஏமாறாமல் இருக்கவும் இந்த பழைய கார்கள் விற்பனை மேளா துவங்கப்பட்டுள்ளது.
மேளாவில், சிறிய வகை முதல் சொகுசு கார்கள் வரை, ரூ.2 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரையிலான கார்கள் அணிவகுத்துள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வகையில் கோவையில் மட்டும் இந்த பிரமாண்ட திருவிழா நடைபெற உள்ளது.கார் தேவைகள் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த கட்டணத்தில் தரமான கார்களை இந்த மேளாவில் வாங்கி செல்லலாம் என்று கூறினார்.
தி சென்னை மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் சம்சுஅலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேளா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கார் வியாபாரிகள் நலசங்கம் கண்ணன், ஸ்ரீசாமி கார்ஸ் பொது மேலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.