May 12, 2022 தண்டோரா குழு
கோவையில் 7 வயதான சிறுவன் வானியல் குறிப்பான பஞ்சாங்கத்தின் , திதி, நட்சத்திரங்களை கூறி நாட்களை துல்லியமாக கணித்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுவன் திரிசூல வேந்தன்.. நீலம், மணிகண்டன் தம்பதியரின் மகனான திரிசூல வேந்தன் அதே பகுதியில் உள்ள ஆங்கில வழி கல்வியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நிற வயதில் இருந்த பஞ்சாங்க காலண்டர்களை ஆர்வத்துடன் பார்ப்பதை கண்ட சிறுவனின் பெற்றோர் அருகில் உள்ள கோயில் அர்ச்சகரிடம் பஞ்சாங்க காலண்டர் பார்ப்பது மற்றும் கணிப்பது குறித்து பயிற்சி மற்றும் பாடம் எடுத்துள்ளார். இந்நிலையில் சிறுவன், கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகமான பஞ்சாங்கத்துன் நாட்களை ஒப்பிட்டு, திதி ,நட்சத்திரங்களை கூறி அசத்தி வருகிறார்.
சிறுவனின் இந்த சாதனை இந்தியன் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. பண்டைய காலத்தில், மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்த, பஞ்சாங்கத்தை சிறுவன் கணித்து கூறுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.