February 24, 2023
தண்டோரா குழு
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் இன்று ரூ.7,00,000 மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல். மேலும் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் காவல்துறையினர் கோவை சரவணம்பட்டி – துடியலூர் மெயின் ரோடு, ஆறுமுகம் ரைஸ் மில் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்ட போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன்குமார் மற்றும் அங்கித்குமார் ஆகியோர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7,00,000 மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் -1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேற்படி சிறப்பாக செயல்பட்டு கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.