November 7, 2022 தண்டோரா குழு
நவீன தொழில்நுட்பம் சார்ந்த புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாக கோவையில் நடைபெற்ற கல்லூரி விழாவில்,தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கோவையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கக்கூட்டம் நடைபெற்றது.இதில்,தமிழக,தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அவர், நவீன தொழில்நுட்பம் சார்ந்த புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும், இளைஞர்களுக்கு தொழில்நுட்பத்துறையில் அதிக வேலைவாய்ப்பு உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தை பொருத்த வரை அமைதி பூங்காவாக உள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவே தெரிவிக்கின்றனர், வன்முறை, தீவிரவாதம் போன்றவைக்கு எதிராக தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார் கோவையில் தொழில்நுட்பத்துறை சார்ந்த கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. நான் முதல்வன்’ திட்டம் போன்றவற்றை தமிழக முதல்வர் அறிவித்து மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
ஐடி துறையை பொருத்தவரை தமிழகத்தை நம்பி வரும் அனைவருக்கும் தேவையான உதவிகள் அனைத்தும் தமிழக அரசு செய்து வருகிறது ஐடி துறை நடத்து வதற்கு, முறையான, பாதுகாப்பு இருக்க வேண்டும், அவர்களுக்கான கட்டமைப்பு இருக்க வேண்டும், அதன்கான கட்டமைப்பை அரசு ஏற்படுத்தி தருவதில் முனைப்பாக உள்ளது மனிதவள மேம்பாடு போன்ற பல்வேறு சிறப்பு மிக்க நடைவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டுகளில் 10% ஆக இருந்த இத்துறை தற்போது 20% ஆக கூடுதலாக இயங்கி வருகின்றது மின்கட்டனம், நியாயமான மின்கட்டனமாக உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாகவே மின்கட்டணம் உயர்வு அடைந்துள்ளது என்றார் இதனை தொடர்ந்து, அக்கவுன்ஸ் துறையில், சிறப்பாக செயல்பட்ட பணியாளர்களுக்கு பாராட்டி கேடயங்களை வழங்கி கவுரவித்தார்.