• Download mobile app
01 Mar 2025, SaturdayEdition - 3307
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையை சேர்ந்த ‘ஆப் வியூ எக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி – புதிய தலைமையுடன் உலகளாவிய விரிவாக்கம்

February 27, 2025 தண்டோரா குழு

பெரும் நிறுவனங்கள் தங்களின் கணினிகள், வலைத்தளங்கள் மற்றும் உள் அமைப்புகளை சீராக இயக்க தேவையான டிஜிட்டல் சான்றிதழ்களை தானாகவே மேலாண்மை செய்யக்கூடிய சேவைகளை வழங்கும் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான ஆப் வியூ எக்-சை (AppViewX) அமெரிக்காவின் ஆஸ்டின் நகரத்தை சேர்ந்த ‘ஹவேலி இன்வெஸ்ட்மெண்ட்ஸ்’ கையகப்படுத்தி உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தின் அடுத்தகட்ட விரிவாக்கத்தை நோக்கி அதை நடத்திச்செல்ல சைபர் செக்யூரிட்டி துறையில் நீண்ட அனுபவம் கொண்ட டினோ டிமாரினோ அவர்களை இந்நிறுவனம் தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.

பெரிய நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் சான்றிதழ்கள் காலாவதியாகாமலும், சமரசம் ஆகமலும் இருப்பதை உறுதி செய்யும் சேவைகளையும், அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே கணினிகளை, அமைப்புகளை பயன்படுத்துவதை உறுதி செய்யும் சேவைகளை வழங்கும் ஆப் வியூ எக்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் இயங்கி வருகிறது.இதற்கு யு.கே.மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அலுவலகம் உள்ளது. மேலும் இந்தியாவின் கோவை மற்றும் பெங்களூருவில் சிறப்பு மையங்கள் உள்ளன.

இந்த நிறுவனத்தை கையகப்படுத்தும் முடிவை ஹவேலி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் எடுத்தபோது அதில் இந்தியாவின் வலுவான தொழில்நுட்ப சூழலையும், இங்கு உள்ள திறமையான பணியாளர்களையும் கருத்தில் கொண்டு ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தின் மீது முதலீடு செய்துள்ளது. இந்த துறையில் ஆப் வியூ எக்ஸ் நிறுவனம் சிறந்து விளங்க தேவையான பெரும் நிதி மற்றும் துறை சார்ந்த நிபுணத்துவம் இரண்டுமே இந்த கையகப்படுத்தல் நடவடிக்கைகு பின்னர் கிடைத்துள்ளது.

இது குறித்து இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியாக இருந்து தலைவராக பொறுப்பேற்கும் க்ரெக்கரி வெப் கூறுகையில்,

“10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், ஆப் வியூ எக்ஸ் அடையாள ஆட்டோமேஷன் துறையில் முன்னணி இடம் பிடித்துள்ளது. மேலும் ஆட்டோமேஷனுக்கு முதலிடம் கொடுக்கும் அணுகுமுறைக்கு முன்னோடியாக உள்ளது. ஹவேலி குழுவுடனான எங்கள் புதிய கூட்டாண்மையால் ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை காண நாங்கள் உற்சாகமாக உள்ளோம். நிறுவனத்தில் அவர்களின் முதலீடு என்பது எங்கள் உலகளாவிய சந்தை நிலையை வலுப்படுத்தவும், தயாரிப்புகளை, கண்டுபிடிப்புகளை மேலும் மேம்படுத்தவும் உதவும்,” என அவர் கூறினார் .

புது தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்ற டினோ டிமரினோ பில்லியன் டாலர் மதிப்புள்ள சைபர் பாதுகாப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்தையும் தலைமை பண்புகளையும் இந்த நிறுவனதிற்கு கொண்டு வருகிறார்.

இதற்கு முன்னர் அவர் குவாலிஸ் எனும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்திலும், ஸ்நைக் எனும் சைபர் பாதுகாப்பு நிறுவனத்திலும் லைமை வருவாய் அதிகாரியாக பனியாற்றி உள்ளார். மேலும் அமெரிக்கவை சேர்ந்த மைம்காஸ்ட் எனும் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு துறையிலும் தலைமை குழுவில் பணியாற்றியுள்ளார். குவாலிஸ் நிறுவனத்தின் பணியாற்றியபோது அந்நிறுவனத்தின் உலகளாவிய வருவாயை அதிகரிக்கவும், முக்கிய கூட்டுகளை அமைக்கவும் அவர் வழிநடத்தியுள்ளார்.

ஸ்நைக் நிறுவனத்தில் அதன் ஆண்டு வருமானத்தை $ 65 மில்லியனிலிருந்து $ 220 மில்லியனாக 2 ஆண்டுகாலத்தில் உயர்த்தி காட்டியுள்ளார். மேலும் மைம்காஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றிய போதுஅதன் வருவாயை 5 ஆண்டுகளில் $ 100 மில்லியனிலிருந்து $ 600 மில்லியனாக மாற்றி காட்டிய குழுவில் இடம்பெற்றுள்ளார். எனவே ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு இவர் அழைத்து செல்வார் என நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

புது தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற டினோ டிமாரினோ கூறுகையில்,

“ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் ஒரு உற்சாகமான நேரத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிறுவனம் மனிதரல்லாத அடையாள மேலாண்மையில் முன்னணி வகிக்கும் நிலையில் உள்ளது. எங்கள் திறமையான உலகளாவிய குழுவுடன் இணைந்து தயாரிப்பு மற்றும் சந்தை விரிவாக்கத்தை விரைவுபடுத்த நான் ஆர்வத்துடன் உள்ளேன். இந்த நேரத்தில் ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸுடன் கூட்டு சேருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

டினோ டிமாரினோவுடன்,ஜிம் வாசில் தலைமை நிதி அதிகாரியாகவும்,ஸ்டீபன் டார்ல்டன் தலைமை வருவாய் அதிகாரியாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இவர்கள் தலைமை பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டுள்ளது பற்றி ஹவேலி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் முதன் நிர்வாக இயக்குனர் இயன் லோரிங் கூறுகையில்,

“ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவிற்கு திரு. டினோ, திரு. ஜிம் மற்றும் ஸ்டீபன் ஆகியோரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் இந்த நிறுவனத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்ல உந்துசக்தியாகவும், வேகமாக வளர்ந்து வரும் அடையாள சந்தையில் நம் தலைமைத்துவ நிலையை விரிவுபடுத்தவும் பெரிதும் உதவுவார்கள்,” என கூறினார்.

இது பற்றி இந்த நிறுவனத்தின் புது தலைவராக பொறுப்பேற்றுள்ள க்ரெக்கரி வெப் கூறுகையில்,

“டினோ-வின் தலைமைபண்பும் அவரின் அனுபவமும் இந்த நிறுவனத்தின் வெற்றியின் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிக்க வழிவகுக்கும். இதன் தலைவராக உள்ள நான் அவருக்கும் எங்கள் குழுவுக்குமான அனைத்து ஆதரவையும் கொடுக்க ஆவலாக உள்ளேன்,” என்றார்.

மேலும் படிக்க