April 4, 2022 தண்டோரா குழு
இளம் தலைமுறையினரை உறுப்பினராக கொண்ட ரோட்ராக்ட் கிளப்பின் மாவட்ட கருத்தரங்கில்,கோவையை சேர்ந்த இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
ரோட்டரி கிளப்பின் ஒரு பிரிவாக இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது ரோட்ராக்ட் கிளப். முழுவதும் இளம் தலைமுறையினரால் நடத்தப்படும் இந்த அமைப்பின் சார்பாக மருத்துவம்,கல்வி,பசிப்பிணி போக்குவது,இரத்த தானம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரோட்ராக்ட் கிளப்பின் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் கோவை வேளாண்மை பல்கழக அரங்கில் நடைபெற்றது.எலைட் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை ரோட்ராக்ட் மெஜஸ்டிக்,சி.ஐ.டி,மற்றும் ஆதித்யா ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்தனர்.
இதில்,தமிழகம்,கேரளாவில் இருந்து சுமார் 60 கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி விவேக்,மாவட்ட தலைவர் கோகுல் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,சிறப்பு அழைப்பாளர்களாக,மாவட்ட ஆளுநர் ராஜசேகர் சீனிவாசன்,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி,மாவட்ட ரோட்ராக்ட் கமிட்டித் தலைவர் குமார், மூத்த வழக்கறிஞர் ஏ கே எஸ் சுந்தரவடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் சிறப்பு விருது மற்றும் பாராட்டு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.