September 30, 2021 தண்டோரா குழு
கோவை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்புகான இறுதிகட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று நடைபெற்றது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் மொத்தமுள்ள 1,433 இள நிலை பட்டப் படிப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் இதுவரை 1,283 இடங்கள் நிரம்பியுள்ளன. அதேபோல முதுநிலை பட்டப்படிப்பில் மொத்தமுள்ள 552 இடங்களில் இது வரை 373 இடங்கள் நிரம்பியுள்ளது.
இதற்கிடையே தமிழக அரசு இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் கூடுதலாக 25 சதவீத மாணவர்களை சேர்த்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இளநிலை பட்டப்படிப்புகளைப் பொருத்தவரை 25 சதவீத கூடுதல் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து முடிந்து விட்டது.
200&க்கும் மேற்பட்ட மாணவர்கள்
மீதம் உள்ள 150 இடங்களுக்கு இன்று இறுதிகட்ட கலந்தாய்வு காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 200&க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கல்லூரியில் குவிந்தனர்.
இந்த இறுதிகட்ட கலந்தாய்வில் விண்ணப்பித்து விரும்பிய பாடம் கிடைக்காதவர்களும், இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் கலந்து கொள்ளலாம்.இந்த 150 இடங்களுக்கு 300&க்கு மேல் கட்&பாப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
அதிகளவில் கலந்தாய்வில் மாணவர்களின் 10,11,12&ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் சான்று, பள்ளி டி.சி, கலந்தாய்விற்கு விண்ணப்பித்திருந்தால் அற்காக சான்று நகல் அகியவற்றை ஆசிரியர்கள் ஆய்வு செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் கலை பிரிவு சார்ந்த படங்களையே தேர்வு செய்து வருகின்றனர்.
இந்த நடப்பு ஆண்டிலும் கலைப் பிரிவு சார்ந்த பாடங்களுக்கே அதிகளவில் மாணவ&மாணவிகள் விண்ணப்பித்து சேர்ந்துள்ளனர். சில தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் தொடர்ந்து சேர்க்கை நடைபெற்று வருகிறது.