August 8, 2022 தண்டோரா குழு
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேர நீட்டிப்பு அரசாணையை மாற்றக்கோரி கோவை அரசு மருத்துமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களின் பணி நேரத்தை 40 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரமாக நீட்டிக்கும் அரசாணை என் 225ஐ மாற்றக் செய்ய கோரியும், கடந்த 2009 முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 339 ஐ தொடர வேண்டும் என வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை, மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் சங்கத்தினர் கூறும்போது,
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதாக தமிழக அரசு பாராட்டியது, இந்தியாவிலேயே தமிழகத்தில் மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றியதாக ஒன்றிய அரசும் தெரிவித்தது. இவ்வாறு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கான பரிசா இந்த பணி நேரம் நீண்டிப்பு, மேலும் இம்மாதிரி 40 மணி நேரத்தை 48 மணி நேரமாக பணி நீட்டிப்பு செய்வதால் மருத்துவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகும் சூழல் உள்ளது.
எனவே கலைஞர் கொண்டு வந்த பழைய அரசாணையையே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.