August 10, 2017
தண்டோரா குழு
மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் ஸ்ரீஷ்யாம் பைரவர் அறக்கட்டளை சார்பில் கோவை அரசு மருத்துவமனையின் அவசர தேவைக்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு தலைமையில் மருத்துவ உபகரணங்கள் கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரராஜனிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, நிர்வாகிகள் அஜீஸ், அக்கீம், பிரோஸ், அபு, காதர் மற்றும் மாவட்ட, நகர, நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீஷ்யாம்பைரவர்அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.