• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் ரூ2.5 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு

December 9, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் முழுவதும் ரூ 6 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், கோவை அரசு மருத்துவமனையில் ரூ2.5 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி ஆகியோர் திறந்து வைத்தனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் நலத் திட்ட துவக்க விழா தமிழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை துவங்கப்பட்டு நூறு ஆண்டுகளாக கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின் சார்பில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோரது முன்னிலையில் இன்று பொது சுகாதார துறையின் கீழ்காணும் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த திட்டமானது தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி, 2020-21ஆம் ஆண்டிற்குரிய சட்டமன்ற கூட்டத்தொடரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் சுகாதார கட்டிடங்கள் திட்டம் அறிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஜமீன் ஊத்துக்குளி மற்றும் 4-வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பு கட்டடம் மற்றும் வி.காளியாபுரம், பூராண்டம்பாளையம், போடிப்பாளையம், எம்.ஜி.புதூர், அய்யம்பாளையம் மற்றும் சின்ன நெகமம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், வா.சந்திராபுரம், ரெட்டியாரூர் மற்றும் ஆழியார் நகர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு ஆகிய 11 கட்டிடங்கள் ரூ.3 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டது. இத்துடன் பொது சுகாதாரத் துறையின் நுற்றாண்டு விழாவினை முன்னிட்டு ரத்ததானம் வழங்கிய பொது சுகாதார துறை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2.5 கோடி செலவில் உபகரணங்கள் புணரமைக்கப்பட்ட மருத்துவ கட்டிடங்கள் மற்றும் திறந்துவைக்கப்பட்டது. மேலும் முதலாம் ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து தமிழ் மன்றத்தை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

மேலும் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் அவசர கால பராமரிப்பு பிரிவு, குழந்தைகள் பிரிவு, தீவிர அறுவை சிகிச்சை பிரிவு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெலி மெடிசன் தொலை மருத்துவத்திற்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் திரவ மருத்துவ ஆக்சிஜன் பிளாண்ட் ரூ.45 லட்சம் மதிப்பீட்டிலும் அமைச்சர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஊட்டி பிராதன சாலை மற்றும் ஊட்டி மலைப்பாதையில் ஏற்படும் விபத்துகளின் போது சிகிச்சை அளிக்க சிடி ஸ்கேன் வசதி வேண்டுகோள் விடுத்து வந்தனர். தற்போது தமிழக முதல்வர் உத்திரவின்படி தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் மூலம் 146 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் சிடி ஸ்கேன் நிறுவப்பட்டுள்ளது இது போல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தேசிய சுகாதார திட்ட நிதியின் கீழ் உயர் தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் சுமார் 80 ஆயிரம் மக்கள் பயன்பெறுகின்றனர்.

சூலூர் அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் மற்றும் எக்ஸ் ரே உள்ளிட்ட நவீன உயிர் காக்கும் கருவிகளுடன் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் இன்று அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்சிகளின் போது உடன்,மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் சமீரன், துணைமேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், சென்னை மருத்துவ கல்லூரி இயக்குநர் சாந்திமலர், டீன் நிர்மலா, முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆறுக்குட்டி, பனப்பட்டி தினகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க