May 10, 2017
தண்டோரா குழு
கோவை ஆசிரியர் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட இளையராஜா புழல் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை சிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை நிவேதிதா. கணவரை பிரிந்து வாழும் அவர் சென்னையில் நேற்று கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இளையராஜா என்பவர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், புழல் சிறையில் அடைப்பட்ட தீயணைப்பு படை வீரர் இளையராஜா இன்று கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரது உடல் ராயப்பட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.