• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்கக் கோரிக்கை

September 13, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க வேண்டும் என பாஜக கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி காரமடை சங்கீதா மற்றும் கோபால்சாமி சூலூர் கவுன்சிலர் ஆகிய இருவரும் பாரத பிரதமர் மோடியின் புகைப்படத்தை கூட்டரங்கு அந்த அறைக்குள் வைக்க வேண்டும் என கூறி வெளி நடப்பு செய்தனர்.

இது குறித்து பலமுறை மாவட்ட ஊராட்சித் தலைவர் சாந்தி அசோகனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் மோடியின் புகைப்படம் வைக்காததால் பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடியின் புகைப்படத்தை ஊராட்சி மன்ற கூட்டரங்கத்தில் வைக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து பேசிய சூலூர் கவுன்சிலர் கோபால்சாமி,

இந்த கோரிக்கை கடந்த ஆட்சியில் இருந்தே வைக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் இதுவரை பிரதமர் புகைப்படம் வைக்கப்படவில்லை என தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் என்று கூறினால் எடப்பாடியார் படம் தான் வைத்திருக்க வேண்டும் ஆனால் அதற்கும் முன்னாள் இருந்த கலைஞர் புகைப்படம் எல்லாம் வைக்கப்பட்டிருக்கும் போது பிரதமர் புகைப்படம் வைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க