February 18, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் கரூரில் இருந்து வந்திருக்கக்கூடிய திமுகவினரை மாவட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும், துணை ராணுவ பாதுகாப்போடு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.