April 21, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட பால் உற்பத்தி மற்றும் கூட்டுறவு சங்க அலுவலகம் மூலமாக தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் உடன் காலாண்டு கூட்டம் ஆர்.எஸ்.புரத்திலுள்ள விற்பனை மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் பொது மேலாளர் ராமநாதன் மற்றும் விற்பனை மேலாளர் நாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவின் பாலகம் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு கூறியதாவது:
கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆவின் பாலகம் திறக்க வேண்டும். அனைத்து அரசு துறை கட்டிடங்கள், மாநகராட்சி மற்றும் உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிறுத்தங்களில் ஆவின் பாலகம் திறக்க வேண்டும். மேலும் கோவையில் ஆவின் பால் விலை கூடுதலாக விற்பனை செய்வதை தடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.