September 19, 2022
தண்டோரா குழு
கோவை அன்னூர் பதவாம் பள்ளியை சேர்ந்த ராமசாமி என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் மேலில் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னூர் பகுதியை சேர்ந்த கைத்தறி வேலை செய்து வரும் ராமசாமி அந்த பகுதியில் உள்ள கந்து வட்டி ஜெயராம் என்பவரிடம் ரூபாய் 3 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளார். பின்பு வாங்கிய 3 லட்சம் ரூபாய் வட்டியுடன் சேர்த்து 5 லட்ச ரூபாயாக திருப்பி அளித்துள்ளார்.
ஆனால் கந்துவட்டி கடன் கொடுத்த ஜெயராமன் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதால் இந்த தீக்குளிக்கும் முடிவை எடுத்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறுகையில் தொடர்ந்து கந்துவட்டி ஜெயராமன் என்பவர் பணம் கேட்டு மிரட்டி வருகிறார். ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப் பட்டுள்ளது. ஆனாலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் வேறுவழியின்றி இந்த தீக்குளிக்கும் முடிவை எடுத்துள்ளார்.
பின் அங்கே காவலர்கள் தீ குளிக்க முயன்ற ராமசாமியை தடுத்து நிறுத்தி அவர் மேல் தண்ணீர் ஊற்றி எந்த வித அசம்பாவித சம்பவங்கள் இல்லாமால் காப்பாற்றினார்.