September 17, 2021 தண்டோரா குழு
தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்தத்தை தொடர்ந்து அவரது 143 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழக அரசு பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களிலும், அரசு அலுவலகளிலும் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் சமூக நீதி உறுதி மொழி ஏற்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சமூக நீதி நாள் உறுதி ஏற்பு வாசகங்களை வாசிக்க, கூடியிருந்த நுற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்து கொள்வேன் என்றும் மானுட பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும் எனவும் சமூக நீதியே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த சமூக நீதி நாளில் உறுதி ஏற்கின்றேன் என அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.