October 31, 2022 தண்டோரா குழு
ஹேர் அழகியல் தொடர்பான அட்வான்ஸ்டு குரோஹேர் கிளினிக் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அதன் புதிய கிளையை துவங்கியது.
நுகர்வோர் தேவையை விரைவுபடுத்துவதற்கு ஆதரவாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அட்வான்ஸ்டு குரோஹேர் கிளினிக் தனது 9 வது கிளையை துவங்கியுள்ளது.இது தலைமுடி சிகிச்சைக்கான பிரத்யேக பிரண்டாகும், உயர்தர சேவை, புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன சிகிச்சைகள் மூலம் குறைந்த செலவில் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறார்கள்.
இந்நிறுவனம் முழுமையான US-FDA-வால் அங்கீகரிக்கப்பட்ட கிளினிக்காகும் மற்றும் முடி உதிர்தல் மற்றும் முடிவளர்ச்சிக்கான மேம்பட்ட மருத்துவ மற்றும் மருத்துவம் சாராத சிகிச்சைகளான ஹேர் ட்ரான்ஸ்ப்ளான்ட்,லேசர் ஹேர் தெரபி,அட்வான்ஸ்டு க்ரோ ஹேர் காஸ்மெட்டிக் சிஸ்டம், உள்ளிட்ட ஹேர் தொடர்பான . அழகியல் மருத்துவத் துறையில் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் காப்புரிமை பெற்ற உயர்தர இயந்திரங்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய கிளை துவக்க விழா அட்வான்ஸ்டு குரோஹேர் கிளினிக் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சரண் வேல் தலைமையில் நடைபெற்றது.கிளை உரிமையாளர்கள் சிவக்குமார், தினேஷ், வேலுசாமி, மற்றும் நிறுவன அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக பொங்கலூர் பழனிசாமி,மற்றும் பைந்தமிழ் பாரி ஆகியோர் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தனர்.
புதிய கிளையில்,மேம்பட்ட க்ரோஹேர் கிளினிக், மைக்ரோ பிளேடிங், லிப் மைக்ரோ பிக்மென்டேஷன், கண் இமை லிப்ட் & நீட்டிப்புகள், லேசர் சிகிச்சைகள் போன்ற சில பிரீமியம் அழகியல் சிகிச்சைகள் மற்றும் பலவற்றையும் வழங்குவது குறிப்பிடதக்கது.