• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இரத்தினம் கல்லூரியில் நாளை நடைபெறும் “குரு துருவனா விருது -2021 !

October 8, 2021 தண்டோரா குழு

சர்வதேச அரங்கில் “Make in India” என்ற திட்டத்தை நடைமுறையில் சாத்தியமாக்கக் கூடிய நாளைய இளம் வர்த்தக தலைவர்களை உருவாக்கும் வகையில் “Masters Educational & Charitable Trust” மூலம் நடத்தப்படக் கூடிய”Masters professional Academy” கடந்த 2020ஆம் ஆண்டு “The Institute of Cost Accountants of India, Coimbatore chapter” – உடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இதன் மூலம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு CMA எனினும் தொழில்முறை படிப்பை சேவை நோக்கில் மிகக் குறைந்த செலவில் தரமான கல்வியை கொடுத்து அவர்களை வாழ்வில் வெற்றி பெறச்செய்ய இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஜுன் 2020-21 இல் நடைபெற்ற CMA (Foundation) முதல்நிலை தேர்வில் “Masters Professional Academy” -லிருந்து தேர்வு எழுதிய 98 மாணவர்களில் 78 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே கோவை மாவட்ட அளவில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவர்களின் 13 பேர் “Masters Professional Academy”-இன் மாணவர்கள் என்பது பெருமை கொள்ளத்தக்கது. ஒரு ஆசிரியருக்கு மிகச்சிறந்த விருது மாணவனின் மனதில் இடம் பிடிப்பது, அவ்வாறு இடம்பிடித்து மாணவர்கள் வாழ்வை மாற்றிய உணர்வுப்பூர்வமாக பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களை கொண்டாடும் வகையில் மாணவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட 1,100 ஆசிரியர்களிலிருந்து மாணவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் 100 சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து “குரு துருவனா விருது -2021” வழங்கப்பட இருக்கிறது.

“Masters Professional Academy” -லிருந்து முதன்முதலாக CMA என்னும் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டபோது மாணவர்களின் பதிவு கட்டணம் அத்தனையையும் செலுத்தி மாணவர்களுக்கு CMA-வை அடையாளம் காணச் செய்த கல்லூரி இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி . இக்கல்லூரியில் பயின்ற மாணவர்களில் 12 பேர் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதல் 15 இடம் பிடித்த மாணவர்களில் இக்கல்லூரி மாணவர்களும் அடங்குவர்.

மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களையும் அங்கீகரித்துக் கொண்டாடும் இந்நிகழ்ச்சியில் “Masters Professional Academy”- உடன் இணைந்து இரத்தினம் கலை அறிவியல் கல்லூரியும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் கொண்டாட தயாராகிறது. இவ்விழா 9/10/2021 அன்று காலை 10.00 மணியளவில் இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மண்டலத்தின் ICAI (CMA) வின் தலைவர் V.மதன கோபால் பங்கேற்க , இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளருமான முனைவர் இரா.மாணிக்கம் தலைமையுரை வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

மேலும் படிக்க