November 11, 2021 தண்டோரா குழு
கோவை இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் (பொறியியல் கல்லூரியில்) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டின் துவக்க விழா 10.11.2021 மற்றும் 11.11.2021 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மைன்ராய்டு அகாடமியின் நிறுவனர் பிரசன்ன வெங்கடேசன், தன்னம்பிக்கை பேச்சாளர்.ப்ரவீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் முனைவர் மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார். இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதன்மை நிர்வாகி முனைவர்.T.நித்தியானந்தம் , இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் முனைவர்.B.நாகராஜ் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மைன்ராய்டு அகாடமியின் நிறுவனர் பிரசன்ன வெங்கடேசன் பேசுகையில்,
மாணவர்கள் தங்கள் வாழ்க்கைப்பாதையின் மிக முக்கிய கட்டத்தில் முதல் அடி எடுத்து வைத்துள்ளனர், இதில் வெற்றி கண்டு மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்று கூறினார்.
தன்னம்பிக்கை பேச்சாளர் ப்ரவீன் சுல்தானா பேசுகையில்,
மாணவர்கள் எந்த நிலை வந்தாலும் தன்னம்பிக்கையினை மட்டும் இழந்து விடக்கூடாது என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கைஎழுச்சி உரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கற்றலின் அடிப்படை பாடத்தோடு அவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் விதத்தில் 14 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.இந்த 14 நாட்களில் அடிப்படை பொறியியல் கல்வி,துறை சார்ந்த செயல்முறை கற்றல்,கருத்து பட்டறைகள்,கவியரங்குகள், இசை நிகழ்ச்சிகள், புகைப்பட பயணம்,இயற்கையை நேசி போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.