November 20, 2017 தண்டோரா குழு
கோவை இருகூர் கிராமம் குரும்பபாளையத்தில் சாக்கடை நீர் செல்ல கால்வாய் இல்லாமல் தேங்கி நிற்பதாகவும், இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக கூறி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மனோரஞ்சிதம் கூறுகையில்,
சாக்கடை நீர் தேங்கி நிற்பது குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் பல முறை நான் புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் ஏழை குடும்பத்தை சார்ந்தவள். நான் கீழ் சாதி என்பதற்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது சம்பந்தமாக யாரிடம் முறையிடுவது என்பது தெரியாமல் தமிழக முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு மனு அனுப்பியுள்ளேன்.மேலும் இதுசம்பந்தமாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.இந்த மனு மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.