November 13, 2021 தண்டோரா குழு
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையத்தில், புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையத்தளம் துவக்கி வைக்கப்பட்டது. இதனை கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.நிர்மலா துவக்கி வைத்தார்.
இது குறித்து ஏஜிஎஸ் ஹெல்த்கேர் இயக்குனர் டாக்டர் ஆதித்யா குகன் கூறுகையில்,
உலக சர்க்கரை நோய் தினத்தை 1991ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனமும், சர்வதேச சர்க்கரைநோய் பவுண்டேஷன் இணைந்து உருவாக்கின. சர்க்கரைநோயால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கவனத்தை கவரவும் இந்த நாள் உருவானது. ஒவ்வொரு ஆண்டும் உலக சர்க்கரை நோய் தினம், ஒரு குறிப்பிட்ட கருத்தின் அர்ப்பணிப்போடு, ஓரிரு ஆண்டுகளுக்கு நடத்தப்படும். நடப்பு 2021 – 23ம் ஆண்டுக்கான கருத்துரு, “சர்க்கரை நோய் கவனிப்பு – இப்போது இல்லாமல் வேறு எப்போது?” என்பதாகும்,” என்றார்.
பல லட்சம் இளஞர்கள் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பெறும் வகையில், புதிய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். கலந்துரையாடல் தரும் வகையில் இந்தியாவில் முதல் முறையாக இணையதள பக்கத்தை, இந்த உலக சர்க்கரை நோய் தினத்தில் அர்ப்பணிக்கிறோம் என்றார்.
இந்த இணையத்தள பக்கங்களின் சிறப்பம்சங்கள் குறித்து டாக்டர் ஆதித்யன் குகன் கூறுகையில்:
இந்த இணையத்தள பக்கமானது, அனைத்து கேள்விகளுக்கும் ஒலி வடிவிலான பதில்களை தரும். ( சர்க்கரை நோய் என்றால் என்ன என்பது முதல் அதனால் ஏற்படும் சிக்கல்கள் வரை). மக்கள் மனதில் உள்ள முட நம்பிக்கை வரை பதில்கள் உள்ளன. உதாரணமாக, டைப் 1 சர்க்கரை நோய் பற்றி அறிய, முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒலித்தகவல்கள், ஆங்கிலத்திலும், தமிழிலும் இடம் பெற்றுள்ளன. அதோடு மட்டுமின்றி, தனித்துவமிக்க சமிக்ஞை பட்டன் ஒன்றும் இதில் உள்ளது. சர்க்கரை அளவு அதிகரித்து, உதவி வேண்டுவோர் இந்த இணையத்தளத்தில் தேட நேர்ந்தால், இந்த SOS சமிக்கை பட்டனை அழுத்தினால், அவர்களது இருப்பிடம் அறிந்து, உதவி செய்ய முடியும்.
அவர்களுக்கு தேவையான கவனிப்பு மற்றும் வழிகாட்டுதல்களும் தரப்படும். இன்னும் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த இணையத்தள பக்கம். சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான உணவு முறைகள், அளவீடுகள் மற்றும் இருதயம்/ சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறைகள் பற்றி தரப்பட்டுள்ளன. சர்க்கரை நோயாளிகளின் பாதப் பாதுகாப்பு விளக்கமும் உள்ளது. ஒவ்வொரு நாளும் இடம் பெறும் செய்திகள், கொங்கு மண்டலத்தில் உள்ள மக்களின் அறிவியல் சார்ந்த விளக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதில் இடம் பெற்றுள்ள கணக்கீட்டு அமைப்பு, தனிநபரின் வயது, உடலமைப்புக்கு ஏற்ற வைகயில் எவ்வளது வரை ரிஸ்க் எடுக்க முடியும் என விளக்கப்பட்டுள்ளது.
இதில் இடம் பெறும் நடவடிக்கைககள், பல மில்லியன் இளைஞர்களை ெசன்றடையும். அவர்கள், வேகமான வளர்ச்சி பெற்று வரும் மக்கள் தொகை, உடற்பயிற்சி இல்லாததால் ஏற்படும் பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பற்றி அறிய வாய்ப்பாக அமையும். இந்த நாளில், “லேசான உணவுகளை உண்டு, கடினமா உழைத்து, சரியாக துாங்கி, சத்தமில்லாமல் கொல்லும் சர்க்கரை நோய்க்கு முடிவு கட்டுவோம்” என உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இணையத்தள முகவரி: www.covaidiabetes.com .