January 17, 2022 தண்டோரா குழு
கோவை ஏல மையத்தில், டீ தூள் விலை கிலோவுக்கு 3 ரூபாய் 17 காசு அதிகரித்தது.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் டீ தூள் ஏலம் விடப்படுகிறது.இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான 2-வது ஏலத்தில் 43 பேர் கலந்து கொண்டனர்.இந்த ஏலம் மின்னனு முறையில் நடந்தது.இந்த ஏலத்திற்கு 2 லட்சத்து 41 ஆயிரத்து 430 கிலோ டீ தூள் வந்தது.
அதில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 151 கிலோ ஏலம் போனது. ஒரு கிலோ டீ தூள் விலை 120 ரூபாய் 16 காசு. ஆனால் கடந்த ஏலத்தில் ஒரு கிலோ 116 ரூபாய் 99 காசுக்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு 3 ரூபாய் 17 காசு விலை அதிகரித்துள்ளது. மொத்தம் ரூ.1 கோடியே 98 லட்சத்து 44 ஆயிரத்து 544-க்கு டீ தூள் ஏலம் போனது. இதேபோல் இலை ரக டீ தூள் 2 லட்சத்து 28 ஆயிரத்து 413 கிலோ ஏலத்துக்கு வந்தது. அதில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 651 கிலோ ஏலம் போனது.
ஒரு கிலோ இலை ரக டீ தூளின் விலை 104 ரூபாய் 56 காசு ஆகும். இது கடந்த வாரம் 107 ரூபாய் 98 காசு ஆக இருந்தது. இதனால் இந்த வாரம் ஒரு கிலோவுக்கு 3 ரூபாய் 42 காசு விலை குறைந்தது. இதன்படி விற்பனையான இலை ரக தேயிலையின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 66 லட்சத்து 93 ஆயிரத்து 108 ஆகும். இந்த ஏலத்தில் 42 பேர் கலந்து கொண்டனர்.