September 13, 2022 தண்டோரா குழு
கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் பாரதி நினைவு நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவில் துணைவேந்தர் முனைவர் ப. வேங்கடாசலபதி தலைமையுரையாற்றினார்.
பாரதியாரின் சிந்தனைகளைப் பின்பற்றி மாணவர்கள் தமது கல்விக்கு நற்பண்புகளாலும், நன்னடத்தையாலும் புகழ் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.விழாவில் வாழ்த்துரை வழங்கிய மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப.தமிழரசி,பாரதியின் பன்முக ஆளுமைகளையும், அதன் வழியே மாணவா் அடைய இயலும் முன்னேற்றத்தையும் எடுத்துரைத்தார்.
விடுதலை உணா்வும், நாட்டுப்பற்றும் மிக்க மகாகவி பாரதியாரைப் பின்பற்றினால், ‘எழுச்சிமிகு இந்தியாவை உருவாக்க இயலும்’ என்று கூறினாா். விழாவில் கோவை குமரகுரு கலை அறிவியல் கல்லூாியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவா் அ. ராமசாமி, ‘இந்தியா உலகிற்கு அளிக்கும்’ என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.
பாரதியாாின் சிந்தனைகள் ஒட்டு மொத்த மானுட குலத்திற்கான சிந்தனையாக உயா்ந்து நிற்கும் பேற்றினையும், உலக நாடுகளில் பாரதியாாின் சிந்தனைகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும், பல மொழிகளைக் கற்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். தமிழ்மொழியின் சிறப்பினை பாரதியாா் போற்றிய திறத்தை எடுத்துரைத்ததுடன், வேற்று மொழி இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டியதன் தேவையையும், அதனைக் குறித்த பாரதியாரின் சிந்தனைகளையும் மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.
பாரதியாாின் நினைவு நாளை ஒட்டி கற்பகம் உயா்கல்விக்கழக மாணவா்களுக்கும், பிற பல்கலைக்கழக மாணவா்களுக்குமாக தனித்தனியாக போட்டிகள் நிகழ்த்தப்பெற்று பாிசுகளும், சுழற்கேடயமும் வழங்கப்பட்டன.
மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் மதுரை, தியாகராசா் கல்லூாி மாணவா், செ. பாலு ஆனந்த் முதல் பாிசினையும், கோவை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூாி மாணவா் வி. கெளாிசங்கா் இரண்டாம் பாிசினையும், கோவை சட்டக்கல்லூாி மாணவி கு.சுமித்ரா மூன்றாம் பாிசினையும் வென்றாா்கள்.
உடுமலை அரசு கல்லூாி மாணவா்கள் ஈ.ஹரிஹரதேவி, மா.வசந்தகுமார் ஆகியோர் அதிகப் புள்ளிகளைப் பெற்று சுழற்கேடயமும் பெற்றனா். முதலாமாண்டு மாணவா்கள் செல்வி ச.தர்ஷினியின் வரவேற்புரையுடனும், செல்வன் செ.ஹரிஷின் நன்றியுரை ஆற்றினார்.