September 22, 2022 தண்டோரா குழு
கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழத்தில் முதலாமாண்டு பொறியியல் புலம் மாணவர்களின் 2022 2023 கல்வியாண்டுக்கான துவக்க விழா நடந்தது.
இந்நிகழ்விற்கு பல்கலைக்கழக தலைவர் முனைவர்.இராச.வசந்தகுமார் தலைமை வகித்தார்,பொறியியல் புலம் முதன்மையர்.முனைவர்.அமுதா வரவேற்புரை நிகழ்த்தினார்.
பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்.பழனிச்சாமி பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து விவரித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இன்போசிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறைத் தலைவர் சுஜித்குமார் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடத்தில் சிறப்புரையாற்றினார்.
அவர்தம் உரையில்,
பெற்றோர்கள் தான் நம் தெய்வங்கள் அவர்கள் இல்லையென்றால் நாம் வசதியாக வாழ முடியாது , இந்தக் கல்வியை நாம் பெறுவதற்கு அவர்களே காரணம் அவர்களை நாம் படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்தவுடன் அவர்களை பேணிகாக்க வேண்டும் என்றும் குறிப்பாக மாணவர்களுக்கு இலக்கு என்பது வேண்டும் அந்த இலக்கை தீர்மானித்துவிட்டால் பின்பு நீங்கள் சாதிப்பது சுலபம் இன்று பொறியியல் துறையில் நாம் அபார வளர்ச்சியும் சாதனைகளும் புரிந்து வருகிறோம் உலக நாடுகளுக்கு பொறியியல் துறையில் இந்தியா ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றார்.
நிறைவாக அறிவியல் மற்றும் மனிதபுலம் துறை தலைவர் முனைவர்.தெய்வநாயகி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவர் நலன் முதன்மையர் முனைவர்.ப.தமிழரசி , துணை பதிவாளர்.முனைவர்.பிரதீப் , தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர். பழனிவேலு அனைத்துத் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் .