September 17, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்டம் காரமடையில் தந்தை பெரியார் உணவகம் என்று பெயர் வைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில்,பெரியார் பிறந்தநாளான இன்று அந்த உணவகத்தை அதே இடத்தில் தி.மு.க மற்றும் திராவிட இயக்கத்தினரால் திறந்து வைக்க ஏற்பாடு நடந்தது.
இதையடுத்து, தந்தை பெரியார் உணவகத்தை இன்று சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப.வீரபாண்டியன், தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.