• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்- வானதி சீனிவாசன்

October 25, 2022 தண்டோரா குழு

பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான அக்டோபர் 23-ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில், கோவை கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறி சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் காரில் இருந்த ஜமேசா முபின் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஜமேசா முபின் வீட்டில், காவல் துறை நடத்திய சோதனையில், வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான அம்மோனியம் நைட்ரேட், பேட்டரி, இரும்பு ஆணிகள் உளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமேசா முபினை, ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தொடர் குண்டு வெடிப்பு, கலவரங்கள் என, கோவை 25 ஆண்டுகளுக்கு, பயங்கரவாதிகளின் இலக்காக இருந்த மாநகரம் கோவை. கோவை குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும், அதில் காயமடைந்தவர்களின் இன்னமும் அதிலிருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர்.

ஆனால், சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பது பெரும் வருத்தம் அளிக்கிறது. காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது என்றாலும், முதலமைச்சர் என்ற முறையில் திரு. ஸ்டாலின் அவர்கள், நடந்த சம்பவத்திற்கு கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டும்.

1998 போல நடந்து விடுமோ, கோவையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்று நாட்களும் மெளனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.

கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதால், இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும். இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும். பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில், எவ்வித சமரசத்திற்கு தி.மு.க. அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது. இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க