October 25, 2022
தண்டோரா குழு
கோவையில் ஞாயிற்று கிழமை அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்ததில் கார் பல துண்டுகளாக சிதறியது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
இந்தக் காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கோவை உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜி.எம் நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.