• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கிராஸ்கட் ரோடு ஜோயாலுக்காஸ் ஷோரூமின் மறு திறப்பு விழா !

December 18, 2021 தண்டோரா குழு

கோவை கிராஸ்கட் அமைந்துள்ள ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி மறுசீரமைக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது இன்று மறு திறப்பு விழா நடைபெற்றது.

ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி உலகின் வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஜுவல்லரி ரீடெய்ல் குழுமம், தென்னிந்தியாவில் வலுவான தனது செயல்பாடுகளின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. தற்போது தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் உள்ள பல்வேறு ஷோரூம்களை புதுப்பித்து தரம் உயர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை கிராஸ்கட் அமைந்துள்ள ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி மறுசீரமைக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது இன்று மறு திறப்பு விழா நடைபெற்றது.

ஒரு தலைசிறந்த டிசைனரின் உதவியோடு இந்த ஷோரூமின் உட்கட்டமைப்பு பிரம்மாண்டமாக மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை வரவேற்றிட, அவர்களுக்கு உண்டான சௌகர்யங்களை மனதில் வைத்து ஷோரூமின் இட வசதி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பார்க்கிங் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஷோரூமிற்கு வரும் போது மீண்டும் ஒரு முறை உருவான புதிய ஷோரூம் என்ற உணர்வு உங்களுக்கு வெளிப்படும். எல்லையில்லா கலெக்ஷன்கள், பாரம்பரிய டிசைன்கள், நவீன டிரெண்டிற்கு ஏற்ற நகைகள் அனைத்தும் இந்த மறுசீரமைப்பு செய்த ஷோரூமில் இன்னும் கூடுதல் தேர்வுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

ஷோரூமின் மறுதிறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் விதமாக விஷேசமாக ஒவ்வொரு ரூ.50,000 மதிப்புள்ள தங்க நகை பர்ச்சேஸ்க்கும் 200 மி.கி. தங்க நாணயத்தை இலவசமாக அளிக்கிறோம். அதே போல் ரூ.25,000 மதிப்புள்ள வைர நகை பர்ச்சேஸ்க்கும் 200 மி.கி. தங்க நாணயத்தை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

ஷோரூமின் மறு திறப்பு விழா குறித்து ஜோயாலுக்காஸ் குழுமத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் கூறும்போது,

மக்களின் அன்பும், ஆதரவும் எங்களுக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. அதற்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி. தற்போது கோயம்புத்தூர் ஷோரூமின் ஷாப்பிங் அனுபவம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை உணர்ந்து நாங்கள் இந்த ஷோரூமை மறு சீரமைப்பு செய்துபுதுப்பித்துள்ளோம். ஆண்டு முடிவை நோக்கி புதிய ஆண்டின் தொடக்கத்தை வரவேற்கும் விதமாக தற்போது மறு திறப்பு விழா காணும் எங்கள் ஷோரூமின் உட்கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

அழகான இந்த சூழலில் அற்புதமான டிசைன்கள் எல்லையில்லா கலெக்ஷன்கள், தலைசிறந்த சேவை அனைத்தும் நாங்கள் ஒருங்கே அளிக்கிறோம். இந்த மேம்படுத்தப்பட்ட கோவை, கிராஸ்கட் ரோடு ஷோரூமிற்கு வாடிக்கையாளர்களாகிய தங்களை பேரன்போடு வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க