• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் உயிர்தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் திறப்பு

June 9, 2022 தண்டோரா குழு

பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் உயிர்தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் (BIRAC EYUVA CENTER) திறப்பு விழா மற்றும் மாணவர் மன்றத்தின் நிறைவு விழா ஜூன் 8 ஆம் தேதி புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

BIRAC நிறுவனம் EYUVA மையத்தையும் திறப்பதன் மூலம் ரூ.266.5 லட்சம் மானியத்துடன் அதன் புதுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ள மாணவியர்களை ஊக்குவிக்கிறது. பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிதான் இந்தியாவில் BIRAC-ஆல் ஆதரிக்கப்படும் ஒரே பெண்கள் நிறுவனம். இம்மையத்தின் செயல்பாடனாது பயன்பாட்டு ஆராய்ச்சி கலாச்சாரத்துடன் மாணவர்களை ஊக்குவிப்பது, வளர்ப்பது மற்றும் மேம்படுத்துவதாகும்.

மேலும் சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக தீர்வுகளை உருவாக்க இளம் மாணவர்களுக்கும், ,ஆராய்ச்சியாளர்களிடையே தேவை சார்ந்த கண்டுபிடிப்புத் திறன்களை மேம்படுத்துவதாகும்.எம் கல்லூரியுடனான EYUVA மையம் BIRAC தொழில்துறை இணைப்பு, தயாரிப்பு மேம்பாடு, வணிக மயமாக்கல், IP உருவாக்கம் மற்றும் நிறுவனத்திற்கான கண்டுபிடிப்புகள் மூலம் அவர்களின் தொழில் முனைவோர் திறன்களை அதிகரிக்க, இளங்கலைப் பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு முன்-இன்குபேஷன் வசதியை வழங்குகிறது.

இந்த மையமானது அதிநவீன வசதிகள் மற்றும் உயர்தரக் கருவிகளுடன் கூடிய அனைத்துத் துறைகளிலும் உள்ள உள் ஆய்வகங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது.அதனைத் தொடர்ந்து எமது ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் டாக்டர் ஆர். நந்தினி அவர்கள் விழாவிற்குத் தலைமை ஏற்று, விழாவிற்கு வருகை தரவிருக்கும் ஆன்றோர் பெருமக்களுக்கு வரவேற்புரை வழங்கினார்.அதனை அடுத்து பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ். நிர்மலா அவர்கள் நடப்பு கல்வியாண்டின் ஆண்டறிக்கை வாசித்தளித்தார்.

அடுத்ததாக பைராக் EYUVA மையத்தின் திறப்பு விழா மற்றும் கல்லூரியின் ஆண்டு மலர் மற்றும் செய்தி மடல்களை மதிப்பிற்குரிய சிறப்பு விருந்தினர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கர்னல் பேராசிரியர் டாக்டர் பி. காளிராஜ் அவர்கள் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

அவரது உரையில் மாநில அளவில் சமுதாய மேம்பாட்டிற்காகவும் கல்லூரியின் மேம்பாட்டிற்காகவும் கல்வித் துறையின் மேம்பாட்டிற்கும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரக்கூடிய நிறுவனர், செயலர், முதல்வர் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு தன் பாராட்டுகளைத் தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்கான மிகச் சிறந்த கல்லூரி என்றும் இந்திய அளவில் 6-வது இடத்திலும், தமிழகத்தில் முதலிடத்திலும் NAAC –தரவரிசைப் பட்டியலில் 3.71 புள்ளிகளையும் பெற்ற மிகச் சிறந்த கல்லூரி என பாராட்டினார்.

IQAC குழுவினர் சரியான சமயத்தில் தகவல்களை வழங்குவதால் கல்வி நிறுவனங்களால் தமக்கான இடத்தை பெற முடிகிறது என்றும்,
சமுதாயம் கல்வித்துறையில் மேம்பட வேண்டும் என்ற பாரதியாரின் கனவை நனவாக்கிய பெருமை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியையே சாரும் என்றும், கல்வித்துறைக்கு மிகச்சிறந்த பங்களிப்பை இக்கல்லூரி நிர்வாகத்தினர் வழங்கி வருகிறார்கள் என்றும் வாழ்த்தினார்.

கல்லூரி நிர்வாகத்தினரால் மாணவியர் திறன்கள் ஊக்குவிக்கப்படும் போது தான் புதிய கண்டுபிடிப்புகள் வெளிப்படும் என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் மாணவியர் செய்யும் ஆய்வுகள் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் அமைதல் வேண்டும் என்றும் கூறினார். மாணவியருக்கு திறன் மேம்பாடு கல்லூரியிலேயே மேம்பட வேண்டும் என்றும், அதற்குத் துணையாக கல்லூரிகள் செயல்பட வேண்டும் என்றும் கூறினார். நாளும் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் மாணவியர் புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தொழிற்சாலைகளும் அதையே விரும்புகின்றன என்றும் கூறினார்.
இல்லம் தேடி கல்வி, தொழிற்கூடங்களில் கல்வி என்ற நம் முதல்வரின் திட்டத்தை நாம் அனைவரும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

கல்வி நிறுவனங்கள் சமுதாயக் கடமையோடு செயல்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டினார். ஆகவே கல்வியாளர்கள் தொழில் துறைக்குத் தேவையான மாணவியரை உருவாக்க வேண்டி இருப்பதால் தொழில் துறையையும் கல்வி நிறுவனத்தையும் இணைக்கும் பணியை பாரதியார் பல்கலைக்கழகம் மேற்கொண்டு இருக்கிறது என்றும், பைராக் இ-யுவா மையத்தை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் கல்லூரியில் தொடங்கியதற்காக கல்லூரி நிர்வாகத்தினர் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

பின்பு பல்வேறு நிகழ்வுகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பெற்று சிறப்பிக்கப்பட்டார்கள். இறுதியாக நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

மேலும் படிக்க