January 6, 2024 தண்டோரா குழு
கோவை குமரகுரு கல்லூரியில் கோயம்புத்தூர் காட் லேண்ட் எனும் கலை, இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கோவை விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் திறமையை கண்டறியும் விதமாக நடைபெற்ற ‘கோயம்புத்தூர் காட் டேலண்ட் ஷோ 2024 நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில் கோயம்புத்தூர் காட் டெலண்ட் ஷோ 2024 என்னும் மாணவர்களின் திறமைகளுக்கான போட்டிகள் நடைபெற்றது.
கோயம்புத்தூர் விழா 2024″பதினாறாவது பதிப்பு ஜனவரி 2″ஆம் தேதி முதல் 8″ஆம் தேதி வரை கோவையில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் திறமைகளை கண்டறியும் விதமாக ஆண்டு தோறும் கோயம்புத்தூர் காட் டேலண்ட் ஷோ மூலம் மாணவர்களின் திறமைகளை கண்டறியும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு கோயம்புத்தூர் காட் டேலண்ட் ஷோ 2024 போட்டியில் கோவை மாவட்டத்தில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தனி நடனம், குழு நடனம், பாட்டுப்போட்டி, சிலம்பப் போட்டி, பரதநாட்டியம், இசைப்போட்டி, பறை இசை போட்டி, யோகா போட்டி என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் திறமைகளை நடுவர்கள் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி கோயம்புத்தூ காட் டேலண்ட் ஷோ 2024″ஆம் ஆண்டிற்கான பட்டத்தினைை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கனா புகழ் நடிகர் தர்ஷன், பரத்நாயம் நடனக் கலைஞர் லாவண்யா சங்கர் மற்றும் பீட் பாக்ஸர் அபிஷேக் பாஸ்கர் மற்றும் யங் இந்தியன்ஸ் கோயம்புத்தூர் தலைவர் அஷ்வின் மனோகர் ஆகியோர் ஜூரி உறுப்பினர்களாக இருந்தனர்.