March 19, 2022 தண்டோரா குழு
சர்வதேச வனநாளை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் பறவைகள் மற்றும் வண்ணத்து பூச்சி புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சர்வதேச வனநாள் கொண்டாடப்படுகிறது. சர்வதேச வனநாளை முன்னிட்டு வனம், பறவைகள்,விலங்குகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,கருத்தரங்குகள் நடைபெறும்.
அந்த வகையில் கோவை மாவட்ட வனத்துறை சார்பில் சர்வதேச வனநாளை முன்னிட்டு, கோவை சிறுவாணி மலை தொடரில் உள்ள பறவை இனங்கள் மற்றும் வண்ணத்து பூச்சிகளின் புகைப்படங்களின், புகைப்பட கண்காட்சி நடத்தி உள்ளது.
கோவை குற்றாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்பட கண்காட்சியை பார்த்து வருகின்றனர். இதன் மூலம் சிறுவாணி மலை தொடரில் மட்டும் இருக்கும் அரிய வகை பறவைகள், வண்ணத்து பூச்சிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும்.