April 14, 2022
தண்டோரா குழு
கோவை கேஜி மருத்துவமனை சார்பில் இலவச இரத்த அழுத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கோவை கேஜி மருத்துவமனை சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறித்த இலவச பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.இந்த முகாமை கேஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவச்சலம் துவக்கி வைத்தார்.
இது குறித்து டாக்டர் பக்தவச்சலம் கூறுகையில்,
ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாள் தோறும் 3000க்கும் மேற்பட்டோர் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களுக்காக இலவசமாக ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறித்த இலவச பரிசோதனை முகாம் இன்று முதல் 3 நாட்களுக்கு காலையில் ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும் நடைபெற உள்ளது.
முன்கூட்டியே பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் ஆபத்து வராமல் பார்த்துக்கொள்ள முடியும். ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது என்றார்.