• Download mobile app
29 Sep 2024, SundayEdition - 3154
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கொடிசியாயில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச கட்டுமான கண்காட்சி துவக்கம்

September 28, 2024 தண்டோரா குழு

கோவை கொடிசியாயில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச கட்டுமான கண்காட்சியை காவேரி நிறுவனத்தின் JMD வினோத் சிங் ரத்தோர் துவக்கி வைத்தார்.

கோவை மண்டலம் கட்டிட பொறியாளர் சங்கமும் மற்றும் கட்டுமானம் மனை தொழில் கூட்டமைப்பு சார்பாக நடைபெறுகின்ற சர்வதேச கட்டுமான கண்காட்சியை காவேரி குரூப் ஆப் கம்பெனி நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர்,லட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் முத்துராமன், ராமு இண்டஸ்ட்ரீஸ் ராமு ஆகியோர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் கட்டுமான பணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் அளவிற்கு ஸ்டால்கள் அமைத்துள்ளன. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைத்துள்ளனர். கட்டிட உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உரிய ஆலோசனை பொறியாளர் கொண்டு வழங்கப்பட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் தொழிலாளர் நலன் கருதி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் வேலைகளும் இலவசமாக செய்து தரப்படுகிறது.

இந்த கண்காட்சியானது அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா ஏ ஹால் 28ம் தேதி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் 120 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இலவசமாக வந்து பங்கு பெறலாம். இதில், கோசீனா கான் பெஸ்ட் தலைவர் வி பி பழனிச்சாமி, க்ரிக் கான் பெஸ்ட் தலைவர் ராஜதுரை, செயலாளராக செந்தில்நாதன், எஸ் கே இளங்கோவன்,பொருளாளர் சுந்தர்ராஜன், எம் செந்தில் குமார் மற்றும் கோசீனா மற்றும் க்ரிக் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

மேலும் படிக்க