• Download mobile app
04 Jan 2025, SaturdayEdition - 3251
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சரகத்தில் 2024 ஆம் ஆண்டில் 250 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

January 1, 2025 தண்டோரா குழு

இது தொடர்பாக கோவை சரக காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,

கோவை சரகத்தில் உள்ள கோயமுத்தூர் , ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், வாகன விபத்தை குறைப்பதிலும், சாலைப் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்துவதிலும், பொது இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொறுத்துவதிலும், கிராம கண்காணிப்புக் குழு சம்மந்தமாக கலந்தாய்வுக் கூட்டங்கள் ( Village Vigilance Committee ) நடத்துவதிலும் 2024 ஆம் ஆண்டு காவல் துறையினரின் செயல்பாடு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

குற்றத்தடுப்பு : -2023 ஆம் ஆண்டு கோவை சரகத்தில் 151 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டில் 250 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 63 நபர்கள் குற்றத்தடுப்பு வழக்குகளிலும் ( கோவை – 18 . ஈரோடு – 6, திருப்பூர் – 39 ) , 64 நபர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு வழக்குகளிலும் ( கோவை – 9 , ஈரோடு 16 , திருப்பூர் 39 ) , 40 நபர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்திலும் ( கோவை – 5 , ஈரோடு – 12 , திருப்பூர் – 21 மற்றும் 2 நீலகிரி ) , 30 நபர்கள் கள்ளச்சாராய வழக்குகளிலும் ( கோவை – 20 , ஈரோடு – 7 மற்றும் திருப்பூர் – 3 ) , 50 நபர்கள் போதைப் பொருள் வழக்குகளிலும் ( கோவை – 21 , ஈரோடு – 12 , திருப்பூர் – 8 மற்றும் நீலகிரி – 9 ) மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 3 நபர்கள் விபச்சார வழக்கிலும் சேர்த்து 250 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகன விபத்து வழக்கு மற்றும் மோட்டார் வாகன சட்ட வழக்குகள் :

இந்த ஆண்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமீறுபவர்கள் மீது ( Over Speeding , Red Light Jumping , Cell Phone Driving , Drunken Drive , Overload in Goods Carriage ) ஆகிய தலைப்பின் கீழ் 86,370 வழக்குகளும் , மேலும் ( Without Helmet and Without Seat Belt ) ஆகிய தலைப்பின் கீழ் 5,43,855 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் கடந்த ஆண்டைவிட மரணத்தை ஏற்படுத்திய வாகன விபத்து வழக்குகள் குறைந்துள்ளது . 2023 ஆம் ஆண்டு கோவை சரகத்தில் 2135 ( கோவை 692. ஈரோடு – 659 , திருப்பூர் – 723 மற்றும் நீலகிரி -61 ) , மரணத்தை ஏற்படுத்திய விபத்து வழக்குகள் ( Fatal ) பதிவு செய்யப்பட்டுள்ளது . 2024 ஆம் ஆண்டில் கடந்த ஆண்டை விட 205 , மரணத்தை ஏற்படுத்திய வாகன விபத்து வழக்குகள் குறைந்து 1930 ( கோவை – 660 , ஈரோடு – 577 , திருப்பூர் -654 மற்றும் நீலகிரி -39 ) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமிரா ( CCTV ) : –பாரி குற்ற வழக்குகள் ( Grave Crime Cases ) :

2023 ஆம் ஆண்டில் 301 பாரி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது . 2024 ஆம் ஆண்டில் 21 வழக்குகள் குறைந்து 280 பாரி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் 2023 ஆம் ஆண்டில் 115 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டில் 20 வழக்குகள் குறைந்து 95 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு 22 இரவு கன்னக்களவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு 3 வழக்குகள் குறைந்து 19 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம கண்காணிப்பு குழு ( Village Vigilance Committee ) :

2024 ஆம் ஆண்டில் 4078 ( கோவை 370 , ஈரோடு – 1464 , திருப்பூர் – 1111 மற்றும் நீலகிரி 1133 ) கலந்தாய்வு கூட்டங்கள் கிராமங்களில் நடத்தப்பட்டது. அதில் போதைப் பொருட்கள் விற்பனைகளை தடுத்தல், கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவுதல்,குற்ற நடவடிக்கைகளை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுதல் சம்மந்தமாக அறிவுரைகள் வழங்கப்பட்டு இதன் மூலம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிவு செய்து குற்றத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

சொத்துக்கள் களவாடப்பட்டது மற்றும் மீட்கப்பட்டது ( Percentage of Property Lost and Recovery )

2024 ஆம் ஆண்டில் 78 சதவீதம் களவாடப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு சொத்தின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் படிக்க