• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சரவணம்பட்டியில் லோட்டஸ் கண் மருத்துவமனையின் புதிய மருத்துவமனை துவக்கம்

July 5, 2023 தண்டோரா குழு

லோட்டஸ் கண் மருத்துவமனை 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் பீளமேடு மற்றும் ஆர்.எஸ்.புரத்திலும், திருப்பூர், சேலம், மேட்டுப்பாளையத்திலும,; கேரளாவில் கொச்சி மற்றும் முலன்துரத்தியிலும் கிளைகளைக் கொண்டு இயங்கிவருகிறது.

இம் மருத்துவமனை, மக்களுக்கு தரமான கண் சிகிச்சையை அளித்து அவர்களின்; நன்மதிப்பைப் பெற்று தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது.உலகின் பல்வேறு பகுதிகளில் கண் சிகிச்சையில் அறிமுகப்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை உடனுக்குடன் நம் பகுதியில் அறிமுகம் செய்வதில் முன்னோடியாக லோட்டஸ் கண் மருத்துவமனை திகழ்ந்து வருகிறது.

சமீப காலமாக கோவை சரவணம்பட்டியில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஐடி பார்க், மற்றும் தொழில் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு உலகத்தரமான கண் சிகிச்சை தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு சரவணம்பட்டி சிக்னல் அருகே லோட்டஸ் கண் மருத்துவமனையின் புதிய கிளை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதுகுறித்து லோட்டஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சுந்தரமூர்த்தி கூறும்போது :-

“மக்களின் அதிகரித்துவரும் தேவைகளுக்கேற்ப இந்த புதிய மருத்துவமனையில் சிறப்பான கட்டமைப்பும், நவீன தொழில் நுட்பம் கொண்ட உபகரணங்களுடன் கண்புரை மற்றும் விழித்திரை அறுவை சிகிச்சை, லாசிக் லேசர் சிகிச்சை, கார்னியா மற்றும் பார்வை குறைபாடு சேவை,நீரிழிவு விழித்திரை நோய், கண் நீர் அழுத்த நோய் சேவை, பார்வை நரம்பியல் சிகிச்சை, குழந்தை கண் மருத்துவம் போன்றவற்றிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்”. இதுவரை 1.2 கோடி பேருக்கு சிகிச்சையும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றார்.

மருத்துவமனையின் முதன்மை தலைமை அதிகாரி டாக்டர் கே.எஸ்.ராமலிங்கம் அவர்கள் லோட்டஸ் கண் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிழியர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதைப் பாராட்டினார்.

சிறப்பு விருந்தினராக கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் கலந்து கொண்டு புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார்.

துவக்க விழா சலுகையாக ஜுலை 31-ம் தேதிவரை அனைத்துப் பொது மக்களுக்கும் கண் பரிசோதனை மற்றும் மருத்துவர் ஆலோசனை இலவசமாக செய்யப்படும்

மேலும் படிக்க