February 8, 2018 தண்டோரா குழு
கோவை சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக 130 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகிவுள்ளது.
கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களில் வசிப்போருக்கு மிக முக்கிய நீராதாரமாக சிறுவாணி அணை உள்ளது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவு அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் கன மழை பெய்தது.இந்த கனமழை 130 மில்லி மீட்டர் மழை அளவாக பதிவாகி உள்ளது.
கோவை வேளாண் பல்கலை கழகத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்றும்(பிப் 8) நாளையும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போது அணையில் நாற்பது அடிக்கு நீர் இருப்பு உள்ள நிலையில்,கோடை வரை நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தினமும் எட்டு முதல் 9 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.