July 13, 2022 தண்டோரா குழு
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளும் விதமாக கோவை சுகுணா பிப் பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
கோவை காளப்பட்டி பகுதியில் சுகுணா பிப் பள்ளி உள்ளது.இங்கு மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பயன்படும் வகையில் அவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக தேர்தல் நடத்தப்பட்டது. அந்த வகையில் சுகுணா பிப் பள்ளியின் சேர்மன் லட்சுமிநாராயனசாமி, தலைவர் சுகுணா லட்சுமிநாராயனசாமி, முதல்வர் பூவனான்,கல்வி ஒருங்கிணைப்பாளர் ஷோபா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மாணவர்களுக்கு தலைவர் மாணவிகளுக்கான தலைவி, விளையாட்டு செயலாளர்,கலை மற்றும் கலாச்சார செயலாளர்,ஹவுஸ் கேப்டன்,துணை தலைவர் உள்ளிட்ட பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
வேட்புமனுத் தாக்கல், பிரசாரம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களுக்கு கையில் மை வைத்து, கணினி மூலம் வாக்களித்தனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,
பள்ளி மாணவர்கள் தேர்தல் முறைகளைப் பற்றி சிறுவயதிலேயே அறிந்து கொள்வதற்காக தேர்தல் நடத்தப்படுகிறது. கல்வி மட்டுமல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.அந்த வகையில் இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்” என்றனர்.