January 31, 2022 தண்டோரா குழு
கோவை சுங்கம் பகுதியில் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவக்கம் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் மாநகராட்சியில் 5 மண்டலங்களில் இன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
பயிற்சி வகுப்புகளுக்கு வரும் தேர்தல் பணியாளர்களுக்கு வாக்களிக்கும் கருவிகள் குறித்தும் தேர்தல் நடைமுறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.மேலும் பயிற்சி வகுப்புகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதே சமயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.