• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸ் உடன் டீ பியர்ஸ் பார்எவர்மார்க்கின் இணைந்து செயல்பட ஒப்பந்தம்

November 2, 2022 தண்டோரா குழு

டீ பியர்ஸ் பார்எவர்மார்க், உலகின் முன்னணி மற்றும் நம்பகமான வைர நகை பிராண்டாகும். இந்நிறுவனம் தென்னிந்தியாவில் நகை வர்த்தக நிறுவனமான சுமங்கலி ஜூவல்லர்ஸடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான அறிமுக விழாவில் திரைப்பட நடிகை அதுல்யா ரவி பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

அழகிய வைர நகைகள் என்றாலே அது டீ பியர்ஸ் பார்எவர்மார்க் தயாரிப்புகள்தான் என்று குறிப்பிட்ட நடிகை அதுல்யா ரவி, மேலும் கூறுகையில்,

“டீ பியர்ஸ் பார்எவர்மார்க் மற்றும் சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிறுவனங்கள் இணைந்த இந்நிகழ்வில் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் வைர நகை என்பது மிகவும் மறக்க முடியாத தருணாகும். அந்த வகையில் இன்று எனது வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத நாளாகும். டீ பியர்ஸ் பார்எவர்மார்க் தயாரித்த மிக அழகிய நகைகளைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நகைகள் அனைத்துமே மிகவும் அரிய வகை,கைகளால் அழகுற வடிவமைக்கப்பட்டவை. கோவை நகரைச் சேர்ந்த பெண்கள் இயற்கையான, நம்பகமான ஜொலிக்கும் வைர நகைகளை அணிந்திருக்கிறோம் என்று பெருமையாக கூறிக் கொள்ளலாம்” என்றார்.

இரு நிறுவனங்களின் ஒப்பந்தம் குறித்து சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் வி. செந்தில்குமார் பேசுகையில்,

சர்வதேச அளவில் தரமான வைர நகை பிராண்டாகத் திகழும் டீ பியர்ஸ் பார்எவர்மார்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து செயல்படுவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. காலத்திற்கேற்ற மற்றும் பாரம்பரிய நகை கலெக்ஷனை உருவாக்குவதற்கு இயற்கையாக பெறப்பட்ட வைர நகைகளைப் பயன்படுத்துகின்றனர். ஏற்கெனவே இந்நிறுவனத்துக்கும் தென்னிந்தியாவில் வசிக்கும் பெண்களுக்குமான பந்தம் உள்ளது. குறிப்பாக இளம் தலைமுறை பெண்கள் இந்நிறுவன வைர நகைகளை தேடி விரும்பி வாங்குகின்றனர். டீ பியர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த கலவையாக நவீன மற்றும் பாரம்பரிய வடிவிலான நகைகள் கிடைப்பதற்கு வழியேற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான, தனித்துவம் மிக்க நகைகள் – அதாவது வடிவமைப்பில் மறுபதிப்பை உருவாக்க முடியாத வகையிலானவை- கிடைக்கும் என்றார்.

டீ பியர்ஸ் பார்எவர்மார்க் நிறுவன துணைத் தலைவர் அமித் பிரதிஹரி பேசுகையில்,

கோவை நகரில் வசிக்கும் மக்கள் இனி வியத்தகு டீ பியர்ஸ் பார்எவர்மார்க் ஜூவல்லரி வடிவமைப்பிலான நகைகளை சுமங்கலி ஜூவல்லர்ஸில் வாங்கலாம். வைர நகைகளைப் பொருத்தமட்டில் நம்பகத் தன்மை மற்றும் பிராண்ட் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் சுமங்கலி ஜூவ்லர்ஸில் மிக அழகுற வடிவமைக்கப்பட்ட நகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. நகை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் வெறுமனே ஒப்பந்தம் செய்வதில்லை. இதற்கென சர்வதேச அளவில் வகுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளுக்கும் பொருந்தி வரக்கூடிய நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்து ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இதில் வர்த்தக ரீதியில் மட்டுமின்றி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நம்பகத்தன்மை உள்ளிட்ட விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.எங்களது தயாரிப்புகளின் கலெக்ஷனை சுமங்கலி ஜூவல்லர்ஸ் மூலமாக விற்பனை செய்தவதன் மூலம் இரு நிறுவனங்களிடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

சுமங்கலி ஜூவல்லர்ஸில் டீ பியர்ஸ் பார்எவர்மார்க்கின் பிரத்யேகமான ஜூவல்லரி கலெக்ஷன் நகைகள் குறிப்பாக சிக்னேச்சர் பார்எவர்மார்க் அவந்தி, பார்எவர்மார்க் ஐகான் மற்றும் பாப்புலர் பார்எவர்மார்க் டிரெடிஷனல் செட்டிங் நகைகளோடு மோதிரம், காதணிகள், டாலர்கள் மற்றும் வளையல்களும் கிடைக்கும்.

மேலும் படிக்க