• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை செலக்கரச்சல் கிராம பஞ்சாயத்து ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்ட தொடக்க விழா

January 13, 2022 தண்டோரா குழு

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள செலக்கரச்சல் கிராம பஞ்சாயத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அல்ஸ்டாம் நிறுவனம் தனது சமூக பொறுப்புனர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, யுனைட்டட் வே பெங்களூரு தொண்டு நிறுவனத்துடன் ஒன்றிணைந்து. கல்வி மேம்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு, சுகாதார நிலையில் முன்னேற்றம், சுய உதவிக்குழுக்களுக்கான உதவிகள் ஆகியவற்றை “ரூரல் ரைசிங்” என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில், கிராமங்களில் திடக் கழிவு மேலாண்மைக்கு உதவிடும் வகையில் ஒரு டிராக்டர் வாகனம் வழங்கப்பட்டது. இதன் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளைப் பெற்று சிறந்த முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பஞ்சாயத்தில் செயல்படுத்த முடியும். மேலும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு நவீன பொது கழிப்பிடம் அமைத்து மக்களுக்கு கழிவறை பயன்படுத்துவதன் அவசியத்தை விளக்கும் நிகழ்வுகளும் தொடங்கப்பட்டது.

சூலூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர், நவமணி, கிராம பஞ்சாயத்து தலைவர் மரகதவடிவு கருப்புசாமி இத்தொடக்க விழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அல்ஸ்டாம், நிறுவன அமைவிடத்தின் நிர்வாக இயக்குநர், செல்வகுமார் பேசுகையில்,

“கிராமப்புறங்களில் மக்களின் வாழ்வுநிலையை மேம்படுத்த உதவுதல் என்பது அல்ஸ்டாம் நிறுவனத்தின் முக்கியக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இதன் அடிப்படையில் செலக்கரச்சல் கிராமத்தில் மக்களுடன் இணைந்து யுனைட்டட் வே பெங்களூரு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

குறைந்தது 3 வருடங்கள் இது போன்ற தேவையான திட்டங்களை நிறைவேற்றி மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழும் நிலையையும் மேம்படுத்த முனைகிறோம். இந்த திட்டங்களில் எங்கள் நிறுவனத்தின் பணியாளர்களும் தன்னார்வளர்களாக கைகொடுத்து உதவும் வகையில் ஒரு குழுவையும் அமைத்துள்ளோம்” என்று கூறினார்.

யுனைட்டட் வே பெங்களூரு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராஜேஷ் கிருஷ்ணன் பேசுகையில் “

எங்கள் நிறுவனம் “ரூரல் ரைசிங்” என்ற திட்டத்தின் கீழ் கிராமங்கள் கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், ஆரோக்கியம், வாழ்வாதாரம் என்ற அனைத்து துறையிலும் தற்சார்பு நிலையை அடைய உதவ வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது. சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் போருதவி புரிகின்றனர். இங்கு தொடங்கப்பட்ட திட்டம் அரசு மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதன் மூலம் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை அனைவருக்கும் விளக்கும் திட்டமாக அமையும்” என்று கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள 2 மையங்கள் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட உள்ளது. மேலும் 1 புதிய மையமும் கட்டப்பட உள்ளது. இம்மையங்களில் சிறந்த கற்றல் சூழல் அமைய ஏதுவாக பணியாளர்களுக்கான பயிற்சி, பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு போன்றவை “பார்ன் லேர்னிங்” திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.

மேலும், வரும் காலங்களில் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் மற்றும் கிராமத்து இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திறன் மேம்பாடு மற்றும் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் ஆகிய பயிற்சிகளும் அதற்கான உதவிகளும் வழங்கப்படும். இதன் மூலம் இந்த கிராமத்தில் உள்ள சுமார் 6000 மக்கள் பயனடைவார்கள்.

மேலும் படிக்க