• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஜிசிடி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணி தீவிரம்

February 5, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக் காக மாநகராட்சி, நகராட்சிகள, பேரூராட்சிகளில் 17 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில், கோவை மாநகராட்சி, 7 நகராட் சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.மறுபுறம் மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி மாநகராட்சி, நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கு 17 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்கள் மாநகராட்சி: கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கும் சேர்த்து தடாகம் சாலையிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் இந்த மையத்திற்கு தான் கொண்டுவரப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு தனித்தனியாக ஸ்ட்ராங் ரூம் எனப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்கும் அறைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அங்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ள அறைகளில் உள்ள ஜன்னல்கள் அனைத்தும் இரும்பு வலை கொண்டு முதலில் மூடப்படும்.

தொடர்ந்து மரப்பலகைகள் கொண்டு சிறிது கூட இடைவெளி இன்றி முழுவதுமாக ஜன்னல்கள் மூடப்படும்.அந்த அறைக்கு செல்லும் கதவு மட்டுமே திறந்து இருக்கும் மீதி வழிகள் எல்லாம் அடைக்கப்படும்.வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்ததும் அறைக்குள் வைக்கப்பட்டு கதவு பூட்டப்பட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை நாளன்று வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் இடத்திற்கு வருவதற்காக தனிப்பாதையும், தடுப்பு வேலியும் அமைக்கப்பட உள்ளது. முக்கிய பிரமுகர்கள் வந்து செல்ல தனிப்பாதை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணும் அறை உள்பட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இதற்கான பணி இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும்.கடந்த சட்ட மன்ற தேர்தலை விட தற்போது கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறைகளில் 3 அடுக்குகளாக வைக்கப்பட உள்ளது.இதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைவாக முடிக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க