December 27, 2024
தண்டோரா குழு
கோவையை தலைமை இடமாகக் கொண்டு, கண் மருத்துவத்தில் சிறந்த சேவையை வழங்கி வரும்,தி ஐ பவுண்டேஷன், கோவை கண் மருத்துவனையின் புதிய கட்டிடம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 29ஆம் தேதியன்று மாலை 4 மணியளவில் பிரமாண்டமாகத் திறக்கப்பட உள்ளது.
மேலும்,இதன் தொடர்ச்சியாக திறப்பு விழா நிகழ்ச்சிகள்,டி.பி.ரோடு R.S.புரத்தில் அமைந்துள்ள ராஜஸ்தானி மண்டபத்தில் மாலை 6 மணி முதல் 7.30 வரை நடைபெறுகிறது.
புதிய கட்டிடம் திறப்பு விழா குறித்து தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின், தலைவர், டாக்டர். டி ராமமூர்த்தி கூறுகையில்,
1.20 லட்சம் சதுர அடியில் விரிவாக்கப்பட்ட வளாகம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது எங்கள் சேவைகளை மேம்படுத்தவும்,உயர் தர சிகிச்சையை வழங்கவும் எங்களுக்கு உதவுகிறது. இக்கட்டிட உள்கட்டமைப்பின் ஒவ்வொரு பகுதியும் நோயாளியின் நலனை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
இக்குறிப்பிடத்தக்க விரிவாக்கம் ஒரு சிறந்த கண் மருத்துவ சேவை மூலம் நோயாளியின் சிகிச்சை அநுபவங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் தரமான கண் சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.அதற்கு இணங்க உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சைகளை குறைந்த கட்டணத்தில் மனித நேயத்துடன் வழங்குவதே எங்கள் லட்சியமாக கொண்டு சேவை புரிந்து வருகிறோம்.
மேலும் 130 க்கும் மேற்பட்ட திறமையான கண் மருத்துவர்கள், 250+ அனுபவமிக்க ஆப்டோமெட்ரிஸ்ட், மற்றும் 1500 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதே, தி ஐ ஃபவுண்டேஷனின் உண்மையான வலிமையாகும் என்றார்.
விரிவாக்கப்பட்ட வசதியின் அம்சங்கள்:
அதிநவீன கண் மருத்துவ தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த மையம்,அனைத்து விதமான கண் நோய்களுக்கும் சிகிச்சை வழங்கும் வசதி கொண்டது. மேம்படுத்தப்பட்ட மற்றும் விசாலமான காத்திருப்புப் பகுதிகள். 40 ஆலோசனை அறைகள். 60 ஆப்டோமெட்ரி அறைகள்.10 அதிநவீன அறுவை சிகிச்சை அறைகள்.15 கண் மருத்துவ ஆய்வகம் மற்றும் நோய் கண்டறியும் அறைகள்.40 உள் நோயாளிகள் தங்கும் மற்றும் பல பகல் நேர ஓய்வெடுக்கும் அறைகள்.4 கண்ணாடியகம் மற்றும் மருந்தகம்.110 கார் பார்க்கிங் வசதி உள்ளது.
தி ஐ ஃபவுண்டேஷன் தற்பொழுது மொத்தம் 23 கிளைகளை நிறுவி முறையே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கண் மருத்துவத்தை சிறப்பாக அளித்து வருகிறது. தி ஐ ஃபவுண்டேஷன்_ மருத்துவமனையின் அனைத்து மையங்களும் நேஷனல் அக்கிரேடேஷன் போர்ட் ஆப் ஆஸ்பிட்டல்ஸ் (NABH) தொகுத்துள்ள திட்டங்களையும் நியமங்களையும் கடைப்பிடித்து செயல்படுகின்றன.
கடந்த 40 ஆண்டுகளாக தி ஐ ஃபவுண்டேஷன்_தன்னுடைய மருத்துவ மையங்கள் மூலம் கோவை, திருப்பூர், பெங்களூர்,நீலகிரி, பாலக்காடு, எர்ணாகுளம்,கோழிக்கோடு,ஈரோடு, பொள்ளாச்சி,சேலம்,திருநெல்வேலி, மதுரை,திருச்சி,வேலூர் போன்ற மாவட்டங்களில் சுமார் 20 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு சிகிச்சையை அளித்து சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகின்றது.
“தி ஐ ஃபவுண்டேஷன்” கோயம்புத்தூரில் “ராஜலட்சுமி நேத்ராலயா” மற்றும் திருப்பூரில் “திருமூர்த்தி நேத்ராலயா” என்கிற தொண்டு நிறுவனங்கள் மூலம், பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகின்றது. தி ஐ ஃபவுண்டேஷன் என்றும் தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வகையில், ஒர் வலுவான ஆய்வு மற்றும் கல்வி துறையை உருவாக்கியுள்ளது.