• Download mobile app
01 Jan 2025, WednesdayEdition - 3248
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் உலகத்தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் திறப்பு

December 29, 2024 தண்டோரா குழு

கோவையை தலைமை இடமாகக் கொண்டு, கண் மருத்துவத்தில் சிறந்த சேவையை வழங்கி வரும், தி ஐ பவுண்டேஷன், கோவை கண் மருத்துவனையின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா ஞாயிறு (29.12.24) அன்று ஆர்.எஸ். புரம் ராஜஸ்தானி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி வரவேற்புரை வழங்கினார். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராமமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். இந்த புது கட்டிடத்தின் சிறப்புகள் பற்றி டாக்டர் ஷ்ரேயஸ் ராமமூர்த்தி விளக்கினார்.

இந்த நிகழ்வின் கவுரவ விருந்தினர்களாக ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் M. கிருஷ்ணன்; கங்கா மருத்துவமனையின் ஆர்தோபீடிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் S. ராஜசேகரன், கிராஃப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் தலைவர் ஶ்ரீனிவாசன் ரவி ஆகியோர் உரையாற்றினர்.

இவர்களை தொடர்ந்து சி.ஐ.ஐ.கியு. ஹெல்த்கேர் கேட்டலிஸ்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சுவாமிநாதன்; சென்டர் ஃபார் சைட் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் மகிபால் சச்தேவ் மற்றும் சென்னையை சேர்ந்த அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அரவிந்த் ஶ்ரீனிவாசன் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து,சிறப்பு விருந்தினர் ஆரின் கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவர் TV மோகன்தாஸ் பை உரையாற்றினார். நிகழ்வின் இறுதியில் டாக்டர் கீதான்ஷா ஷ்ரேயாஸ் சச்தேவ் நன்றியுரை ஆற்றினார்.

இதுகுறித்து தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின், தலைவர் டாக்டர்.டி ராமமூர்த்தி கூறுகையில்,

1.20 லட்சம் சதுர அடியில் விரிவாக்கப்பட்ட வளாகம்,அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது எங்கள் சேவைகளை மேம்படுத்தவும்,உயர் தர சிகிச்சையை வழங்கவும் எங்களுக்கு உதவுகிறது.இக்கட்டிட உள்கட்டமைப்பின் ஒவ்வொரு பகுதியும் நோயாளியின் நலனை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இக்குறிப்பிடத்தக்க விரிவாக்கம் ஒரு சிறந்த கண் மருத்துவ சேவை மூலம் நோயாளியின் சிகிச்சை அநுபவங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் தரமான கண் சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.அதற்கு இணங்க உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சைகளை குறைந்த கட்டணத்தில் மனித நேயத்துடன் வழங்குவதே எங்கள் லட்சியமாக கொண்டு சேவை புரிந்து வருகிறோம். மேலும் 130 க்கும் மேற்பட்ட திறமையான கண் மருத்துவர்கள்,250+ அனுபவமிக்க ஆப்டோமெட்ரிஸ்ட், மற்றும் 1500 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதே, தி ஐ ஃபவுண்டேஷனின் உண்மையான வலிமையாகும் என்றார்.

விரிவாக்கப்பட்ட வசதியின் அம்சங்கள்:

•அதிநவீன கண் மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த மையம், அனைத்து விதமான கண் நோய்களுக்கும் சிகிச்சை வழங்கும் வசதி கொண்டது.

• மேம்படுத்தப்பட்ட மற்றும் விசாலமான காத்திருப்புப் பகுதிகள்.

• 40 ஆலோசனை அறைகள்.

• 60 ஆப்டோமெட்ரி அறைகள்.

• 10 அதிநவீன அறுவை சிகிச்சை அறைகள்.

• 15 கண் மருத்துவ ஆய்வகம் மற்றும் நோய் கண்டறியும் அறைகள்.

• 40 உள் நோயாளிகள் தங்கும் மற்றும் பல பகல் நேர ஓய்வெடுக்கும் அறைகள்.

• 4 கண்ணாடியகம் மற்றும் மருந்தகம்.

• 110 கார் பார்க்கிங் வசதி.

மேலும் படிக்க