February 10, 2023 தண்டோரா குழு
கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் 75 ஆம் ஆண்டு பவள விழா நினைவாக கோவை ராஜவீதியில் உள்ள கோவை துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் சதுர அடிகள் கொண்ட வெளிப்புற அரங்கம் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.
வெளிப்புற அரங்கம் அர்ப்பணிப்பு சான்றிதழை கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டி கே ரவிந்திரன் வழங்கிட, அதனை கோயம்புத்தூர் வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணியரசி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஆர் முரளி வரவேற்பு உரையாற்றினார்.
முன்னாள் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகர் மற்றும் கட்டிட பொறியாளர் ஜெகதீசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் தனபால், இணைச் செயலாளர் கமல் பாட்ஷா, பொருளாளர் என்.பி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, கோயம்புத்தூர் வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணியரசி அவர்களுக்கு பணி ஓய்வு காரணமாக அவரது சேவையை பாராட்டியும், கட்டிட பொறியாளர் ஜெகதீசன் மற்றும் மேற்கூரை அமைத்துக் கொடுத்த ஆர்.சுரேஷ் மற்றும் அறம் அறக்கட்டளை தலைவர் ரகுராம் சமூகப் பணிகளை பாராட்டியும் கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்
அவர்களை கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, முன்னாள் மூத்த கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் இந்தர் சந்து, துரைராஜ், ராமகிருஷ்ணன், ஏ எம் எஸ் செல்வன் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.