July 18, 2022
தண்டோரா குழு
கோவை மாநகரின் பாரம்பரிய சுழற்சங்கமான தெற்குச் சுழற்சங்கத்தின் (Rotary club of coimbatore south) 39 வது தலைவர் பதவியேற்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவில் சங்கத்தின் தலைவராக
எம்.பி.நல்லதம்பி, செயலராக சிவகானப்பிரகாஷ், பொருளாளராக முத்துக்குமரன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு முன்னாள் தலைவர் R.கல்யாண் குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், விருந்தினராக ரோட்டரி கவர்னர் பதியும் கலந்து கொண்டனர்.
மேலும்,இவ்விழாவில் மாவட்ட துணை ஆளுனர் சஞ்சய் ஷா மற்றும் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.