February 17, 2023 தண்டோரா குழு
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: ‘
கோவை நகரில் 2 கொலைகளை தொடர்ந்து ரவுடி கேங் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பு வாகன தணிக்கை, விடுதி தணிக்கை பணிகள் கோவை வடக்கு, தெற்கு பகுதிகளில் நடக்கிறது. தெற்கு நகர்ப்பகுதியில் 7 வழக்குகள் பதிவானது. 36 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். 5 கத்தி, கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது.
வடக்கு நகர்ப்பகுதியில் 4 வழக்குகள் பதிவானது.28 வீடுகளில் நடந்த சோதனையில் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 3 ரவுடிகளிடம் நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டுள்ளது.இதுவரை 11 வழக்குகளில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.