March 8, 2022 தண்டோரா குழு
கோவை திருமலையம்பாளையம் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பு மையத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கல்லூரி கருத்தரங்கில் இன்று கொண்டாப்பட்டது.
இவ்விழாவிற்கு நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.அனிருதன் வரவேற்புரை நல்கினார்.இந்நிகழ்வினை நேரு கல்விகுழுமத்தின் அறங்காவலர் மற்றும் தலைவர் வழக்கறிஞர் முனைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் சிறப்புரை நல்கினார். சிறப்பு விருந்தினர்களாக புலமுதன்மையர், கோவை மருத்துவக்கல்லூரி டாக்டர்.ஏ நிர்மலா, கேரளாவின் தற்போதைய குளோபல் யு.ஆர்.எப் விருதாளர் சரிதா ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 26 பெண்மணிகளை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நேரு கல்வி குழும நிர்வாகி மற்றும் கல்விச் செயலர் முதன்மை கல்விஅதிகாரி பி.கே கிருஷ்ணகுமார் பெண்கள் சக்தியின் அடையாளம், ஆக்கத்தின் வாழ்விடம், வீரத்தின் விளைநிலம், விவேகத்தின் உறைவிடம் அத்தகைய பெண்களை வாழ்த்துகிறேன் என்று வாழ்த்துரை வழங்க, நேரு சர்வதேச பள்ளியின் தாளாளர் முனைவர் சைதன்யா கிருஷ்ணகுமார் மனம் தளராது உழைக்கும் மங்கைகள் மண்ணில் படைக்கப்பட்ட மாமணிகள் மாபெரும் சாதனைகளை மேலும் படைத்திட தன் மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
விருது பெற்றவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். விருது வழங்கும் விழாவின் நிறைவாக நேரு மகளிர் சிறப்பு மையத்தின் இயக்குனர் மற்றும் கல்லூரியின் சிங்கப்பெண்மணி முனைவர் எம் கனகரத்தினம் நன்றியுரை வழங்கினார்.