March 25, 2022
தண்டோரா குழு
கோவைபட்டு வளர்ச்சி துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பவர் டெல்லர் இயந்திரம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இன்று கோவை மாவட்ட் ஆட்சியர் அலுவலகத்தில் இத்துறையின் சார்பில் 7 பட்டு விவசாயிகளுக்கு பவர் டெல்லர் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டு பட்டு விவசாயத்தில் சிறப்பாக கோவை மாவட்டத்தை சேர்ந்த 3 விவசாயிகளில் முதல் இடத்தை பிடித்த வடுகபாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமிக்கு 25,000 ரூபாய், 2ம் இடத்தை பிடித்த நரசிபுரம் பகுதியை சேர்ந்த முருகசாமிக்கு 20,000 ரூபாயும் மூன்றாம் இடத்தை பிடித்த குமாரபாளையத்தை சேர்ந்த சித்ரா விற்கு 15,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் 2 விவசாயிகளுக்கு பட்டு மனை அமைக்க தலா 1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டது. இவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.