October 22, 2022
தண்டோரா குழு
கோவை பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் குழுமத்தின் சார்பாக மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியது.
ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வியல் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு,பி.எஸ்.ஜி அறக்கட்டளை சார்பாக மாணவர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த மாணவர் இல்லத்தில் பி.எஸ்.ஜி. நிர்வாக குழுவினரின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு பி.எஸ்.ஜி சர்வஜன பள்ளியில் உள்ள மாணவர் இல்லத்தின் குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள், பி.எஸ்.ஜி கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில் மாணவர் இல்லத்தில் வசிக்கும் ,மாணவர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்துமாணவர்களுக்கு பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் சார்பில் புத்தாடை, காலணிகள், பட்டாசு வழங்கப்பட்டது. முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.